"நாட்டை மொழி வாரியாகவோ, மத அடிப்படையிலோ பிரித்து பார்க்க கூடாது" - மருத்துவ முகாமில் ஆளுநர் ஆர். என். ரவி பேச்சு
சென்னை வண்ணாரப்பேட்டையில் ஜன ஆரோக்கிய மேளா சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமை ஆளுநர் ஆர்.என். ரவி தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், நாட்டை ஒரே குடும்பமாக பார்க்க வேண்டும் என்றும், பகுதி வாரியாகவோ, மொழி வாரியாகவோ அல்லது மத அடிப்படையிலோ பிரித்து பார்க்க கூடாது என்றார். சுகாதாரம் நாட்டின் பிரச்சனையாக இருப்பதாகவும், அனைவரும் ஒன்றிணைந்து அதை சீரமைக்க வேண்டும் என்றார். தூய்மையின்மையால், பணக்காரர்களை விட ஏழைகளே அதிகம் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்ட ஆளுநர், சுகாதார விழிப்புணர்வு மிகவும் அவசியம் என்றார். மேலும், ஏழைகளுக்கு நல்ல மருத்துவம் கிடைக்க வேண்டும் என்றும், நோயாளிகளுக்கு Generic மருந்துகளையே மருத்துவர்கள் பரிந்துரைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
Next Story