நடைபயணத்தில் பங்கேற்று ஊர் திரும்பிய காங்கிரஸார் - வழக்குப்பதிவு செய்த போலீசார்
கோவில்பட்டி அருகே சுங்கச்சாவடியில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 35பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம் பாரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் காந்தி தொடங்கியுள்ள நடை பயணத்தில் கலந்து கொண்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்த மதுரை சேர்ந்த காங்கிரஸ் கட்சியினர் தூத்துக்குடி கயத்தார் சாலை புதூர் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூல் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சுங்கச்சாவடி முன்பு வாகனங்களை நிறுத்தி நேற்று இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சு வார்த்தையை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 35பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
Next Story