அரசு மருத்துவமனை மீது வந்த குற்றச்சாட்டுகளை தீர்த்து வாய்த்த ஆட்சியர் | Karaikal
காரைக்கால் அரசு மருத்துவமனை மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. மருத்துவர்கள் பற்றாக்குறை, தரமற்ற சிகிச்சை என பல்வேறு குற்றச்சாட்டுகளை அப்பகுதி மக்கள் முன்வைத்து அவ்வப்போது போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர். சமீபத்தில் காரைக்கால் மாவட்ட ஆட்சியராக குலோத்துங்கன் என்பவர் பொறுப்பேற்றுக்கொண்டார். மருத்துவமனை தொடர்பான புகார்கள் ஆட்சியர் கவனத்திற்கு சென்ற நிலையில், அவற்றை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டார். அந்த வகையில் இதய சிறப்பு முகாமை ஏற்பாடு செய்த அவர், மக்களுக்கு அரசு மருத்துவமனை மீது நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் தானும் பரிசோதித்துக் கொண்டார். ஏராளமான மக்கள் இந்த மருத்துவ முகாமில் கலந்துகொண்டு மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தனர்.
Next Story