தொண்டரின் குழந்தைக்கு திராவிடன் என பெயர் சூட்டிய முதலமைச்சர்

x

சிதம்பரத்தில் தொண்டரின் ஆண் குழந்தைக்கு திராவிடன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் வைத்தார்.

மயிலாடுதுறையில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை நேற்று ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காரில் சென்னைக்கு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது சிதம்பரம் அருகே சிலுவைபுரம் கிராமத்தில் தொண்டர்கள் காத்திருந்ததால் முதலமைச்சரின் கார் நிறுத்தப்பட்டது.

காரில் இருந்த முதலமைச்சரை சந்தித்த வினோத் என்பவர், தனது ஆண் குழந்தைக்கு பெயர் சூட்டுமாறு கோரிக்கை விடுத்தார்.

அதை ஏற்ற முதலமைச்சர், குழந்தைக்கு திராவிடன் என பெயர் சூட்டி வாழ்த்தி விட்டு, அங்கிருந்து புறப்பட்டார்


Next Story

மேலும் செய்திகள்