எம்.எல்.ஏ. வெற்றி செல்லாது என வழக்கு - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

கேரள எம்.எல்.ஏ.வின் வெற்றி செல்லாது என்ற கேரள உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய தடை விதித்துள்ளது.கேரள மாநிலம் தேவிகுளம் சட்டமன்ற தொகுதி உறுப்பினரான ஏ.ராஜா, பட்டியல் இனத்தோருக்கான தொகுதியில் போலி சான்றிதழ் கொடுத்து வெற்றி பெற்றதாக மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் ஏ.ராஜாவின் வெற்றி செல்லாது என அறிவித்தது. இதற்கு எதிராக ஏ.ராஜா தொடுத்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், கேரள உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதித்துள்ளது. மேலும் சட்டப்பேரவை நிகழ்வுகளில் ஏ. ராஜா பங்கேற்க உரிமை படைத்தவர் என்றும், அதேசமயம் தீர்மானத்தின் மீது நடைபெறும் வாக்கெடுப்பில் வாக்களிக்க உரிமை இல்லை என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்