எலான் மஸ்க்கை திட்டி தீர்த்த அமெரிக்க அதிபர்
எலான் மாஸ்க் பொய்களை பரப்பவே ட்விட்டரை வாங்கியுள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமர்சனம் செய்துள்ளார்.
ட்விட்டரை 44 பில்லியன் டாலர்களுக்கு வாங்கிய எலான் மஸ்க், புளு டிக்கிற்கு மாதம் 655 ரூபாய் கட்டணம், ஊழியர்கள் பணி நீக்கம் என அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார். அவரது நடவடிக்கையால் ஜனநாயகரீதியிலான கருத்து பதிவு தளத்தின் உண்மைத்தன்மை என்னவாகும் என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிகாகோவில் நிதி திரட்டும் பிரச்சாரத்தில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இப்போது அனைவரும் எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியது குறித்து கவலைப்படுகிறோம் என்றும் மஸ்க் பொய்களை பரப்பவே ட்விட்டரை வாங்கியுள்ளார் எனவும் விமர்சனம் செய்துள்ளார். பணியாளர் நீக்கத்தை சுட்டிக்காட்டி பேசியிருக்கும் அவர், அமெரிக்காவில் இனி ட்விட்டர் எடிட்டர்கள் இருக்கப்போவது இல்லை, இதனால் குழந்தைகளுக்கான ஆபத்து இருப்பதை எப்படி புரிந்துக் கொள்வது என கேள்வியை எழுப்பியிருள்ளார்.
Next Story