ரக ரகமாய் உருவாகும் 2023 காலண்டர் | 2023calendar

x

2023ஆம் ஆண்டுக்கான காலண்டர் தயாரிக்கும் பணிகள், சிவகாசியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஆண்டுதோறும் ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, சிவகாசியில் உள்ள அச்சகங்களில் தினசரி காலண்டர் தயாரிக்கும் பணி நடைபெறுவது வழக்கம். ஆடி மாதம் 18ஆம் தேதி பூஜையுடன் தொடங்கும் பணி, தை பொங்கல் அன்று நிறைவு பெறும். சிவகாசியில் உள்ள 100க்கும் மேற்பட்ட அச்சகங்கள் மூலம் நடைபெறும் காலண்டர் தயாரிக்கும் பணியில், இரண்டு லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 2023ஆம் ஆண்டுக்கான தினசரி காலண்டர் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெறும் நிலையில், அதன் விற்பனையும் அமோகமாக இருப்பதாக, தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், காகிதம், அட்டை உள்ளிட்ட மூலப் பொருட்களின் விலை 40 சதவீதம் வரை உயர்ந்திருப்பதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்