மத்திய அரசு எடுக்கும் அந்த நடவடிக்கை..அதைத் தடுக்க 4000 கி.மீ சுற்றுப் பயணம்.. Bank staff protest

x

பொதுத்துறை, கூட்டுறவு, கிராம வங்கிகளை தனியார் மயமாக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தினர் 4 ஆயிரம் கிலோமீட்டர் விழிப்புணர்வு வேன் பிரச்சார பயணத்தைத் துவங்கியுள்ளனர். "மக்கள் வங்கிகள் மக்களுக்கே" எனும் தலைப்பில் இந்த விழிப்புணர்வு பயணம் துவங்கியது. இன்று தொடங்கும் இந்த பயணம் வரும் 22ஆம் தேதி திருச்சியில் முடிவடைகிறது. அன்றைய தினம் திருச்சியில் தமிழகத்தில் பிற பகுதியில் இருந்து புறப்பட்ட பிரச்சாரக் குழுவினர் ஒன்றிணைந்து மிகப்பெரிய பொதுக்கூட்டத்தை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்