தந்தி மாலை செய்திகள் | Thanthi evening News | Speed News | Thanthi Short News (30.01.2023)

x

அமைச்சர் நேரு, ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசியதாக வெளியான வீடியோ சில விஷமிகளால் திரித்து எடிட் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்...

தோழமை கட்சிகளை ஒருங்கிணைப்பது குறித்து பேசியதாகவும், ஆனால் பணத்தை பற்றி விவாதித்ததாக தவறான தகவல் பரபரப்பப்படுவதாக குற்றச்சாட்டு...

வீடியோவை எடிட் செய்ததாக எ.வ.வேலு நிருபித்தால் அரசியலை விட்டு விலக தயார்....

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சவால்...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பண விநியோகம் தொ​டங்கி விட்டதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டு....

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தன்னை அங்கீகரிக்க, தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி இடையீட்டு மனுவை தாக்கல் செய்ய ஈபிஎஸ்-க்கு உச்சநீதிமன்றம் அனுமதி....

3 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு, ஓபிஎஸ், தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு...

சென்னையில் ஆதரவாளர்கள் மற்றும் சட்டவல்லுநர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை...

பொதுக்குழு வழக்கில் ஈபிஎஸ் தரப்பு இடையீட்டு மனு தாக்கல் செய்ய அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் ஆலோசனை...

இடைத்தேர்தல் தொடர்பாக பாஜகவின் அறிவிப்பை பொறுத்து, ஓபிஎஸ் தனது நிலைப்பாட்டை அறிவிக்க உள்ளதாக தகவல்....

ஈரோடு கிழக்கு தொகுதியில் 20 ஆயிரம் வாக்காளர்கள் புலம் பெயர்ந்து சென்று விட்டதாகவும், அதனை பயன்படுத்தி கள்ள ஓட்டு போட முயற்சிகள் நடப்பதாகவும் அதிமுகவினர் தேர்தல் அலுவலரிடம் மனு...

வாக்களிக்கும் தேதிக்கு 15 நாட்களுக்கு முன், பூத் சிலிப் வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தல்...


Next Story

மேலும் செய்திகள்