தங்கத்தேரில் காட்சியளித்த முருகன்.. இரவு 10 மணி கடந்தும் காத்திருந்து வழிபட்ட பக்தர்கள் - கோலாகலமான தைப்பூச திருவிழா

x

தைப்பூசத்தை முன்னிட்டு முருகனின் நான்காம் படை வீடான சுவாமிமலையில், இரவு 10 மணி கடந்தும் ஏராளமான பொது மக்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

கும்பகோணம் அருகே அமைந்துள்ள சுவாமி மலை, முருகனின் நான்காம் படை வீடாகும்.

இங்குள்ள சாமிநாத கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்துடன் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்த நிலையில், இரவு 10 மணி வரையிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலத்தில் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்