சபரிமலையில் நடை திறப்பு

x

சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ பண்டிகையை ஒட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது.

தந்திரி மகேஷ்வரு முன்னிலையில் மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை காட்டினார். பின் ஆழிக்குண்டத்தில் சூடம் ஏற்றி தீ மூட்டினார் . தமன பூஜை, களபாபிஷேகம், சகஸ்ரகலச பூஜை உள்ளிட்ட பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும். ஏப்ரல் 15- ந் தேதி விஷூ பண்டிகையை முன்னிட்டு, அதிகாலை நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து காலை 7.30 க்கு பக்தர்களுக்கு விஷூக்கனி காண ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பாரம்பரிய முறைப்படி, அன்றைய தினம் ஐயப்ப பக்தர்களுக்கு தந்திரி, மேல்சாந்தி ஆகியோர் விஷூ கை நீட்டமாக நாணயங்களை வழங்குவார்கள். சிறப்பு பூஜைகளுக்கு பின் ஏப்ரல் 19-ந் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.


Next Story

மேலும் செய்திகள்