"ஆசிரியர்கள் தரக்குறைவாக நடத்துகிறார்கள்"பினாயில் குடித்த பட்டியலின மாணவிகள்
- திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் பட்டியலின மாணவிகளை தரக்குறைவாக நடத்துவதாக எழுந்த புகாரில், தலைமை ஆசிரியை உள்பட 5 பேர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- சின்னாளப்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் ஆசிரியை தரக்குறைவாக நடத்துவதாக கூறி, தொப்பம்பட்டியைச் சேர்ந்த 9-ஆம் வகுப்பு மாணவிகள் 2 பேர், பள்ளி கழிப்பறையில் பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.
- அவர்கள் இருவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- இந்நிலையில், சின்னாளப்பட்டி காவல் நிலையத்தை முற்றுகையிட்ட ஊர்மக்கள், சம்பந்தப்பட்ட ஆசிரியைகள் மீது நடவடிக்கை கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உள்ளிட்ட போலீசார், அவர்களை சமாதானப்படுத்தினர்.
- இந்நிலையில், பிரச்னையில் தொடர்புடைய கணித ஆசிரியை பிரேமலதாவை பணியிடைநீக்கம் செய்தும், உடற்கல்வி ஆசிரியைக்கு மருத்துவ விடுப்பு அளித்தும் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
- மேலும், இச்சம்பவம் பள்ளி தலைமை ஆசிரியை உட்பட 5 பேர் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
Next Story