டி.சி.எஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகரி ராஜேஷ் கோபிநாதன் திடீரென ராஜினாமா செய்துள்ளார்... இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.

x
  • இந்தியாவின் மிகப் பெரிய மென்பொருள் சேவை நிறுவனமான டி.சி.எஸ் எனப்டும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸின் தலைமை செயல் அதிகாரியாக 2017ல்
  • ராஜேஷ் கோபிநாதன் பொறுப்பேற்றார்.
  • கடந்த ஆண்டு அவரது பதவிக்காலம் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டது. இதனால் அவர் 2027 வரை தலைமை செயல் அதிகாரியாக செயல்பட வழிவகை செய்யப்பட்டது. பதவி காலம் முடிய இன்னும் 4 ஆண்டுகள் உள்ள நிலையில், அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார்.
  • டி.சி.எஸின் வரலாற்றில், பணி காலம் முடியும் முன்பு, இடையில் ராஜினாமா செய்த முதல் தலைமை செயல் அதிகாரி இவர் தான். அவரின் ஆண்டு சம்பளம் சுமார் 26 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் பதவி காலத்தில் டி.சி.எஸ் பங்கு விலை 158 சதவீதம் அதிகரித்து 3,185 ரூபாயாக உச்சமடைந்துள்ளது.
  • ராஜேஷ் கோபிநாத் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, டி.சி.எஸின் வங்கி, நிதி சேவைகள் மற்றும் காப்பீடு பிரிவின் தலைவர் கீர்த்திவாசன், தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்