சத்துணவு அரிசியில் புழுக்கள் - அரசு நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை
கரூர் மாவட்டம் புகழூர் தாலுகா திருக்காடுதுறை ஊராட்சிக்குட்பட்ட ஆலமரத்து மேடு பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சத்துணவு வழங்கும் திட்டத்தின் கீழ் அங்கு சத்துணவு மையம் செயல்பட்டு வருகிறது.
மதிய உணவு தயாரிப்பதற்காக சத்துணவு கூடத்தில் சாக்கு மூட்டையில் வைக்கப்பட்டுள்ள அரிசியில் ஏராளமான புழுக்களும், செல்களும் ஊறுவதாக புகார் எழுந்துள்ளது.
இதைப் பார்த்த சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
தரமான உணவுகளை மாணவ, மாணவிகளுக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story