Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (20-02-2023) | Morning Headlines | Thanthi TV

x

நேற்று உயிரிழந்த நடிகர் மயில்சாமியின் இறுதிச் சடங்குகள் இன்று காலை சென்னையில் நடைபெறுகிறது...திரையுலகினர், ரசிகர்கள் சோகம்...

அண்ணாமலையார் கோயிலில் பூஜிக்கப்பட்ட வெட்டி வேர் மாலை, நடிகர் மயில்சாமியின் உடலுக்கு அணிவிக்கப்பட்டது...அண்ணாமலையாரின் தீவிர பக்தர் மயில்சாமி என, கோயிலின் குருக்கள் உருக்கம்...

கேளம்பாக்கம் மேகநாதீஸ்வரர் கோயில் சிவராத்திரி விழாவில் பங்கேற்ற நடிகர் மயில்சாமி...டிரம்ஸ் சிவமணியுடன் இணைந்து பங்கேற்ற கடைசி தருணங்கள்...

தனித்துவமிக்க நடிப்பு, பல குரல் மன்னன் என ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் நடிகர் மயில்சாமி..."கிளாஸ்மேட்ஸ்" திரைப்படத்திற்காக இறுதியாக டப்பிங் பேசிய வீடியோ வெளியீடு...

திராவிட மாடல் ஆட்சிக்கு பெண்கள் பக்க பலமாக இருக்க வேண்டும்...சென்னையில் நடைபெற்ற சத்தியவாணி முத்து அம்மையார் நூற்றாண்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு..

சென்னையில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தமது ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனை...ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல்...

விஸ்வரூபம் படத்தை எடுத்தபோது, என்னை தடுமாற வைத்து வேடிக்கை பார்த்து சிரித்தார் ஜெயலலிதா என கமல்ஹாசன் குற்றச்சாட்டு..அப்போது கருணாநிதி தான், தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, உதவி வேண்டுமா என கேட்டார் எனவும் பெருமிதம்..

ஈ.பி.எஸ். கழுத்தில் நச்சுப்பாம்பாக பாஜக இருக்கிறது...ஈரோடு தேர்தல் பிரசாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம்..

எந்த தேர்தலிலும் இல்லாத அளவுக்கு ஈரோட்டில் மக்களை அடிமைகள் போல நடத்துவதாக தேமுதிக பொருளாளர் பிரேமலாத விஜயகாந்த் குற்றச்சாட்டு...ஈரோடு இடைத்தேர்தலை தடை செய்ய வேண்டும் என்பதை தேர்தல் ஆணையம் உணர வேண்டும் எனவும் வலியுறுத்தல்...

திமுக அளித்த 517 வாக்குறுதிகளில் 49 வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றி இருப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு...ஈரோடு இடைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால்தான், மீதமுள்ள வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றும் எனவும் பேச்சு...

தமிழகத்தில் அதிமுகவை நான்கு கூறுகளாக உடைத்தது மோடி அரசு...விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றச்சாட்டு...


Next Story

மேலும் செய்திகள்