குளிரோடு அடித்து வெளுக்க போகும் கனமழை.. பிப்.1,2 ஆரம்பமே அலர்ட்தான்... | Rain Fall | Tamilnadu
தமிழகத்தில் வரும் பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது... நேற்று இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நீடிக்கிறது. இது நாளை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவடைந்து வரும் பிப்ரவரி 1ம் தேதி இலங்கை கடற்பகுதிகளை சென்றடையக்கூடும். இதனால் இன்று தமிழக கடலோரம், அதை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை, காரைக்காலிலும், நாளை தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 31ம் தேதியில் இருந்து அடுத்த 3 தினங்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
Next Story