IND vs NZ 2nd T20 | விடாமல் போராடிய நியூசி. - கடைசியில் வச்சு செய்த இந்தியா | Ind vs Nz

x

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

லக்னோவில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் சேர்த்தது.

பின்னர் 100 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர்.

இருப்பினும் கடைசி ஓவர் வரை போராடி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 1க்கு 1 என்ற கணக்கில் இந்தியா சமன் செய்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்