டி20 உலககோப்பை பரிசுத்தொகை..ICCயின் மெகா பம்பர் பரிசு அறிவிப்பு..16 அணிகளுக்கும் சர்ப்ரைஸ்

x

இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 13 ஆம் தேதி வரை, ஐசிசி ஆடவருக்கான டி20 உலக கோப்பை தொடர் நடைபெறவுள்ளது.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் தொடங்கும் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறியுள்ளது.

இந்நிலையில், தற்போது போட்டிக்கான பரிசுத்தொகையை ஐசிசி அறிவித்துள்ளது.

இதில் போட்டியில் கலந்து கொள்ளும் 16 அணிகளுக்கும் பரிசு உண்டு என்பது கூடுதல் சிறப்பிற்கு காரணமாகியுள்ளது.

மொத்தமாக இந்திய ரூபாய் மதிப்புப்படி, 45 கோடியே 63 லட்சம் ரூபாய் பரிசு தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கோப்பையை கைப்பற்றும் அணிக்கு இந்திய ரூபாய் மதிப்புப்படி 13 கோடியே 3 லட்ச ரூபாய் பரிசாக வழங்கப் படவுள்ளது.

இதில் 2ம் இடம் பிடிக்கும் அணிக்கு 6 கோடியே 51 லட்ச ரூபாயும், அரையிறுதி போட்டியில் தோல்வியுறும் அணிக்கு 3 கோடியே 25 லட்ச ரூபாயும் பரிசாக வழங்கப்படும்.

முதல் சுற்றிலேயே வெளியேறும் 4 அணிக்கு தலா 32 லட்சத்து 58 ஆயிரம் ரூபாயும்,

அதே வேளையில், முதல் சுற்று போட்டியில் பெறும் ஒவ்வொரு வெற்றிக்கும் தலா 32 லட்சத்து 58 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்.

இதே போல் சூப்பர் 12 சுற்றில் இருந்து வெளியேறும் அணிக்கு தலா 57 லட்சமும், அதே சூப்பர் 12 சுற்றில் வெற்றி பெறும் ஒவ்வொரு போட்டிக்கும் தலா 32 லட்சத்து 58 ஆயிரமும் வழங்கப்படவுள்ளது.

சூப்பர் 12 சுற்றுக்கு ஏற்கனவே ஆப்கானிஸ்தான், ஆஸ்தி ரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் தகுதி பெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.

முதல் சுற்றில் குரூப் ஏ அணிகளும் குரூப் பி அணிகளும் மோதவுள்ளன.

குரூப் ஏ-வை பொறுத்தவரை நமீபியா, இலங்கை, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

குரூப் பி-ஐ பொறுத்தவரை மேற்கு இந்திய தீவுகள், ஸ்காட்லாந்து, அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நான்கு அணிகள் இடம்பெற்றுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்