உயிரை பறித்த சந்தேகம்...தாயை வெட்டி கொன்ற மகன் - மானாமதுரை அருகே அதிர்ச்சி சம்பவம்
சிவகங்கை மாவட்டம் பூவந்தி பகுதியை சேர்ந்த சிவஞானம் - அருள் ஜோதி தம்பதி 15 ஆண்டுகளுக்கு முன்பே விவகாரத்து பெற்று தனித்தனியாக வாசித்து வந்துள்ளனர். சிவஞானம் 2 வது திருமணம் செய்துள்ள நிலையில், அருள் ஜோதியின் இரண்டாவது மகன் விஷ்ணு பிரபு, பெரும்பாலும் அப்பா வீட்டிலும் சில நாட்கள் அம்மா வீட்டிலும் இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று சிவஞானம் வீட்டில் தங்கி இருந்த விஷ்ணு பிரபு, காலையில் எழுந்து வழக்கம் போல் தந்தையுடன் சேர்ந்து விவசாய பணிகளை செய்துள்ளார். பின்னர் திடீரென வயலில் இருந்து வெளியே சென்ற விஷ்ணு பிரபு, பூவந்தி காவல் நிலையத்திற்கு சென்று தனது தாயை நள்ளிரவில் கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். தாயின் நடத்தையில் சந்தேகம் இருந்ததால் அவரை கொலை செய்துவிட்டு பின்னர் தனது தந்தையின் வீட்டில் வந்து தூங்கியதாகவும் அவர் போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து அருள் ஜோதியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.