ஆண்- பெண் திருமண வயது, விவாகரத்து, வாரிசுரிமைக்கு ஒரே சட்டம்..? - "உத்தரவிட முடியாது" உச்சநீதிமன்றம் அதிரடி
- விவகாரத்து, குழந்தைகள் தத்தெடுப்பு, ஆண் -பெண் திருமண வயது உள்ளிட்டவற்றுக்கு ஒரே மாதிரியான சட்டங்களை உருவாக்க உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
- இது தொடர்பாக பாஜகவைச் சேர்ந்த அஸ்வின்குமார் உபாத்தியாயா உள்ளிட்டோர் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
- இவற்றை, உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி டி.ஒய் சந்திர சூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த விவகாரம் நாடாளுமன்றம், சட்டப்பேரவை அதிகாரவரம்புக்குள் வருவதால், இந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்கக் கூடாது என வாதிட்டார்.
- இதை பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம், ஒரே மாதிரியான சட்டங்களை உருவாக்க நாடாளுமன்றத்திற்கு உத்தரவிட முடியாது என தெரிவித்து மனுக்களை முடித்து வைத்தது.
Next Story