திடீர் வருமான வரி சோதனைதமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி விளக்கம்
தூத்துக்குடி வி.இ. ரோட்டில் தலைமை இடமாகக் கொண்டு, தமிழ்நாடு மட்டுமின்றி, நாடு முழுவதும் 300-க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில், வருமான வரி சோதனை நடைபெற்றது. மதுரை, திருச்சி, சேலம், கோவை உட்பட 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து வந்துள்ள அதிகாரிகள், காலை முதல்10 மணி நேரத்திற்கும் மேலாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வங்கியின் வரவு-செலவு கணக்குகள், விதிமுறைகள் சரியாக உள்ளதா?முறைகேடாக பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதா? என்பது தொடர்பாக ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சோதனையை முன்னிட்டு அதிகாரிகளுக்கு மற்றும் வங்கிக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Next Story