"இன்று இரவு முதல் வேலை நிறுத்தம்"ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கம் அறிவிப்பு
பணி நிரந்தரம் செய்ய வேண்டும், என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை என்எல்சி தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக, என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் கோட்டாட்சியர் பூமா, காவல்துறை அதிகாரிகள், என்எல்சி அதிகாரிகள், ஜீவா ஒப்பந்த தொழிற்சங்கத்தினர் என நான்கு தரப்பினர் கலந்து கொண்டனர். மூன்று மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சு வார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இருந்தாலும் மாவட்ட நிர்வாகம் நிற்வாகத்துடன் தொடர்ந்து பேசி வருவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க சிறப்பு பொதுச் செயலாளர் சேகர், திட்டமிட்டபடி இன்று சனிக்கிழமை இரவு வேலை நிறுத்த அறிவிப்பு வெளியாகும் எனவும் என்எல்சி நிர்வாகம் ஒரு சமூக முடிவு எடுத்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் எனவும் தெரிவித்தார்.