"ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்" - இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்க பேட்டி | Srilanka protests

x

அமைதியை பேணுமாறு பொதுமக்களிடம் இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள அவசரச் சட்டத்திற்கு மத்தியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர ஆயுதப் படைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதற்காக நாடாளுமன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளதாக அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும், போராட்டக்காரர்கள் பாசிசத்தை நாடுவதாக குற்றங்சாட்டிய அவர், இந்த முயற்சிகளைத் தடுக்கவும், நாட்டில் இயல்பு நிலையை மீட்டெடுக்கவும் அவசர கால விதி மற்றும் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் என்றும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்