வள்ளுவர் சிலையை புதுப்பிக்க ஜெர்மனியில் இருந்து வரும் பிரத்யேக பொருள்

x

வள்ளுவர் சிலையை புதுப்பிக்க ஜெர்மனியில் இருந்து வரும் பிரத்யேக பொருள்


வள்ளுவர் சிலையை புதுப்பிக்க ஜெர்மனியில் இருந்து வரும் பிரத்யேக பொருள் - சீரமைப்பு பணிகளின் கழுகு பார்வை காட்சி

தமிழுக்கு புகழ் சேர்த்த வள்ளுவரைப் போற்ற குமரிக் கடலில் கடந்த 2000ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதியால் நிறுவப்பட்டது தான் 133 அடி உயர வள்ளுவர் சிலை. வானுயர உயர்ந்து நிற்கும் வள்ளுவரைக் காண வருடத்திற்கு 25 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்வர். இந்நிலையில், வள்ளுவர் சிலை உப்புக் காற்றால் சேதம் அடையாமல் இருக்க 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ரசாயன கலவை பூசும் பணி நடைபெறுவது வழக்கம். அதன்படி தற்போது 1 கோடி ரூபாய் செலவில் கடந்த ஜூன் மாதம் இதற்கான பணிகள் துவங்கப்பட்டன. சுமார் 75 டன் அளவில் இரும்பு பைப்புகள் மூலம் திருவள்ளுவர் சிலையை சுற்றி சாரம் அமைக்கும் பணிகள் நிறைவுற்ற நிலையில் சிலையின் இணைப்பு பகுதிகளில் ஏற்பட்டிருக்க கூடிய வெடிப்புகளை சரி செய்யும் விதமாக தொல்லியல் துறையின் ஆலோசனையின் படி சுண்ணாம்பு கடுக்காய், கருப்பட்டி ஆகியவற்றின் துகள்களை கொண்டு பூசும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி முடிவுற்றதும் சிலையில் படிந்திருக்கும் உப்புத் தன்மையை நீக்கும் விதமாக சிலை முழுவதும் காகிதக்கூழ் ஒட்டப்படும். அதைத் தொடர்ந்து ஜெர்மன் நாட்டிலிருந்து பிரத்தியேகமாக கொண்டுவரப்பட்டுள்ள பாலி சிலிக்கான் எனும் ரசாயனம் மூலம் சிலை முழுவதும் ஸ்பிரே செய்யப்பட்டு சிலை சுத்தம் செய்யப்படும். இந்நிலையில், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை தந்தி டிவியின் கேமரா வழியாக கழுகு பார்வை காட்சியாகக் காணலாம்...


Next Story

மேலும் செய்திகள்