சவுதி அரேபியாவில் சிக்கி தவிக்கும் மகன்.. ஏக்கத்தில் உடல்நலம் குன்றிய தாய்

x

செங்கல்பட்டு மாவட்டம், தைலாவரத்தைச் சேர்ந்த கோவிந்தசாமியின் மகன் ரமேஷ், தனியார் ஏஜென்சி மூலம் கடந்த 2018-ஆம் ஆண்டு சவூதி அரேபியாவுக்குச் சென்றார். தமாம் பகுதியில் அகமது பின் அப்துல் என்பவரிடம் கார் ஓட்டுனராக வேலை பார்த்து வந்த நிலையில், சிறு விபத்தை ஏற்படுத்தியதற்காக, ரமேஷிடம் இருந்து பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை அகமது பின் அப்துல் பறித்து வைத்துக் கொண்டார். மேலும், விபத்தை ஏற்படுத்தியதற்காக 40 ஆயிரம் ரியால் அபராதம் செலுத்த வேண்டும் அல்லது தன்னிடம் 6 ஆண்டுகள் சம்பளம் இல்லாமல் வேலை பார்க்க வேண்டும் அல்லது, 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். அங்கிருந்து வெளியேறி தமிழர்கள் வசிக்கும் பகுதிக்கு வந்த ரமேஷ், வீடுகளில் சிறுசிறு வேலைகள் செய்து வருகிறார். மகன் ஊர் திரும்பாத ஏக்கத்தில் ரமேஷின் தாயார் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், இந்திய அரசும், தமிழக அரசும் இணைந்து தனது மகனை மீட்டுத்தர வேண்டும் என்று கோவிந்தசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்