அப்பாவை ஏற்றி சென்ற போலீஸ் ஜீப் பின்னால் அழுது கொண்டே சென்று தொலைந்துபோன மகன்.. திருப்பூரில் சோகம்

x

திருப்பூரில், தந்தையை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது ஜீப்பை பின்தொடர்ந்து சென்று மாயமான மனவளர்ச்சி குன்றிய மகன் குறித்த சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன. பீகாரை சேர்ந்த பூசன் என்பவர், திருப்பூர் சந்தைபேட்டை பகுதியில் தேநீர் கடை நடத்தி வருகிறார். இவர் மீது கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ஹார்ன்ஸ் விற்றதாக வழக்கு உள்ள நிலையில், சந்தேகத்தின் பேரில் கஞ்சா விற்பதாக பொய் வழக்குப்பதிவு செய்ததாக கூறப்படுகிறது. பூசனை விசாரணைக்காக அழைத்துச் சென்றபோது, போலீஸ் ஜீப்புக்கு பின்னால் சென்ற அவரது மனவளர்ச்சி குன்றிய மகன், 4 நாட்களாகியும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், மனவளர்ச்சி குன்றிய மகன் அழுதபடியே தந்தையை தேடிச் செல்லும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்