காழ்ப்புணர்ச்சியால் சனாதன தர்மத்தை சிலர் தவறாக நினைக்கின்றனர் - ஆளுநர் ஆர்.என்.ரவி
வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் வரிகள், சனாதன தர்மத்தின் எதிரொலி என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். கடலூர் மாவட்டம், வடலூரில் நடைபெற்ற வள்ளலாரின் 200-ஆவது ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், வள்ளலாரின் நூல்களையும் படித்தபோது பிரமிப்பு ஏற்பட்டது என்று கூறினார். பத்தாயிரம் ஆண்டுகள் சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார் என்றும், ஆனால், அறியாமை மற்றும் காழ்ப்புணர்ச்சியால் சனாதன தர்மத்தை சிலர் தவறாக நினைப்பதாகவும் அவர் கூறினார்.
Next Story