இதுவரை 500 உக்ரைனிய குழந்தைகளுக்கு... அதிர்ச்சி தகவலை வெளியிட்ட அதிபர்
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பால் இதுவரை 500 உக்ரைனிய குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளார். போர் துவங்கியது முதல் ஆயிரக்கணக்கான உக்ரைனியர்கள் பலியாகியுள்ளதாகவும், இதில் பல துறைகளைச் சார்ந்த பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் அடக்கம் என்றும் தெரிவித்த ஜெலென்ஸ்கி, தங்கள் நாட்டு மக்கள், குழந்தைகள் பயங்கரவாதத்தில் இருந்து விடுபட வேண்டும் எனவும், சில பகுதிகள் ரஷ்ய ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளதால் பலியான குழந்தைகளின் சரியான எண்ணிக்கையைக் கூற முடியவில்லை என்றும் ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.
Next Story