உஷ்.. உஷ்..! பயணிகள் அலறல்.. நடுவானில் பறந்த விமானத்தில் பாம்பு | Snake | Air india

x

கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் இருந்து துபாய் சென்ற, பயணிகள் விமானத்தில் பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 விமானம் கோழிக்கோடு விமான நிலையத்தில் இருந்து பயணிகளுடன் துபாய் சென்றது. இந்த விமானம், துபாய் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய போது, விமானத்தில் சரக்குகள் வைக்கும் பகுதியில் பாம்பு ஒன்று இருப்பதை ஊழியர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், ஏர் இந்தியா விமானத்தை முழுமையாக சுத்தம் செய்தனர். இதனால், துபாயில் இருந்து கோழிக்கோடு திரும்ப வேண்டிய பயணிகள் பல மணி நேரம் விமான நிலையத்தில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. விமானத்தில் பாம்பு இருந்த‌து குறித்து இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்