வீட்டில் வைத்து தங்கம் கடத்தல்? - சோதனையின் போது கட்டுக்கட்டாக சிக்கிய பணம் மற்றும் நகைகள்
சென்னை திரு.வி.க. நகரில், வீட்டில் வைத்து தங்கம் கடத்தியதாக, 50 வயதான நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பூர் முகம்மதியான் தெரு பகுதியில் உள்ள வீடு ஒன்றில், தங்கம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அந்த வீட்டில் போலீசார் சோதனை செய்தபோது, 50 லட்சம் ரூபாய் பணம், 20 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வீட்டில் இருந்த முகம்மது அப்சர் என்பவரிடம் விசாரணை நடத்தியதில், முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வருமானத்திற்கு அதிகமாக பணம் இருந்ததால், அப்சரை வருமான வரித்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Next Story