பறிபோன உயிர்... ஆத்திரத்தில் டாஸ்மாக் மீது கல்வீசி பெண்கள் போராட்டம் - பரபரப்பு காட்சி

x
  • சிவகங்கையில் டாஸ்மாக் கடை முன்பு நடந்த விபத்தில் உயிரிழந்தவரின் உடலுடன், அந்த கடைக்கு எதிராக கல்லெறிந்து உறவினர்களும்,பெண்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • சிவகங்கை அகிலாண்டபுரத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுக்கடை முன்பு, இரண்டு நாட்களுக்கு முன்பு நேரிட்ட விபத்தில், அதே பகுதியைச் சேர்ந்த முசாபர் கனி என்பவர் பலத்த காயமடைந்தார்.
  • மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.
  • அவருடைய உடல், சிவகங்கைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், டாஸ்மாக் கடை முன்பு, அமரர் ஊர்தியை நிறுத்திய உறவினர்களும், அப்பகுதி மக்களும் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடத்தில் ஈடுபட்டனர்.
  • அப்போது சில பெண்கள், டாஸ்மாக் கடை மீது கல்லெறிந்ததால் பதற்றம் ஏற்பட்டது.
  • சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் சமாதானம் அடையவில்லை. இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, டாஸ்மாக் மேலாளர் கடையை மூடிய பிறகே, உடலை எடுத்துக்கொண்டு கலைந்து சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்