ஆப்கனில் சிக்கி தவித்த சீக்கியர்கள்...மத்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை
ஆப்கனில் சிக்கி தவித்த சீக்கியர்கள்...மத்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை
ஆப்கானிஸ்தானில் சிக்கி தவித்த 55 சீக்கியர்கள் மத்திய அரசின் நடவடிக்கையால் நாடு திரும்பினர். ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சி நடைபெற்று வருவதால் அங்கிருக்கும் சீக்கியர்களை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு முயன்றது. அதன்படி வழங்கப்பட்ட அவசர கால விசா மூலம் 55 சீக்கியர்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து டெல்லி விமான நிலையத்திற்கு வருகை தந்தனர். அவர்களை வரவேற்று உறவினர்கள் மகிழ்ந்தனர். ஆப்கானிஸ்தானில் நிலைமை சரியில்லை என்றும், 4 மாதங்களாக தன்னை சிறையில் அடைத்து வைத்திருந்ததாகவும் நாடு திரும்பிய சீக்கியர் ஒருவர் தெரிவித்துள்ளார்
Next Story