சார்பதிவாளர் அலுவலகத்தில் கொள்ளையடிக்க சென்ற திருடனுக்கு காத்திருந்த அதிர்ச்சி - சேலத்தில் பரபரப்பு..!
சேலம் வீரபாண்டி பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு ஊழியர்கள் பணிக்கு சென்றபோது பூட்டு உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்துள்ளது. மேலும் பணம் வைக்கும் பெட்டி அலுவலக வளாகத்தில் தூக்கி வீசப்பட்டும் கிடைந்துள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அலுவலகத்தில் பணம் எதுவும் இல்லாத நிலையில், ஆவணங்கள் திருடப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Next Story