பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டம்
திருவண்ணாமலை அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப்பள்ளி ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே குன்னத்தூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.
இங்கு ஆய்வக அலுவலராக கோவிந்தசாமி என்பவர் வேலை பார்த்து வருகிறார்.
இவர் நூலகத்தில் மாணவிகள் சிலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது,
இதனை மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவிக்கவே, அவர்கள் வாயிலாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் கோவிந்தசாமியை போலீசார் கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து பள்ளியின் முன்பாக திரண்ட பெற்றோர் முற்றுகை போராட்டத்திலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story