நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிறார் செந்தில் பாலாஜி..?

x

சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கைதாகியுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று மீண்டும் ஆஜராக உள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க கடந்த 14ம் தேதி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இந்நிலையில், நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைய உள்ளதால், காணொலி காட்சி வாயிலாக, நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்