அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு - உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பரபரப்பு வாதம்

x
  • சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ஏற்றுக் கொள்ள முடியாது என உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாதிட்டுள்ளது.
  • இது குறித்த மேல் முறையீட்டு மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ண முராரி, வி.சுப்ரமணியன் அடங்கிய சிறப்பு அமர்வு விசாரித்து வருகிறது.
  • இந்த வழக்கு விசாரணையின் போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின், சம்மனை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது ஏற்றுக் கொள்ள முடியாது என வாதிட்டார்.
  • இதைத்தொடர்ந்து செந்தில் பாலாஜி சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கபில் சிபல், சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்புச்சட்டத்தின் 50, 63 ஆவது பிரிவுகளை எதிர்த்து ரிட் மனுவுக்கு பதில் அளிக்க மத்திய அரசுக்கும், அப்போது மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, அந்த ரிட் மனுவுக்கும், இந்த வழக்குக்கும் எவ்வித தொடர்பும் இல்லை, விசாரணைக்கு முட்டுக்கட்டை ஏற்படுத்த இது போன்அமலாக்கத் துறைக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என வாதிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்