இந்தி பேசுபவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை - கோவையில் அதிர்ச்சி சம்பவம்

x

சூலூர் அருகே பெட்டிக்கடையில் இந்தி பேசுபவர்களை குறிவைத்து கஞ்சா விற்ற நபரை போலீசார் கைது செய்தனர். கருமத்தம்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், அங்குள்ள பெட்டிக்கடை ஒன்றில், வடமாநில தொழிலாளர்களிடம் பேசிய நபரை பிடித்து விசாரித்தனர். அவரிடம் புகையிலை வடிவில் கஞ்சா இருப்பது தெரிய வந்த‌தால், காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர் தூத்துக்குடியை சேர்ந்த மைக்கேல்ராஜ் என்பதும், தேனி, தூத்துக்குடியில் இருந்து கஞ்சா வாங்கி வந்து, இந்தி பேசுபவர்களுக்கு விற்பனை செய்த‌தும் தெரிய வந்த‌து. இதையடுத்து அவரை கைது செய்து ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்