உணவு டெலிவரி செய்வது போல் வீடுகளுக்கே சென்று கஞ்சா விற்பனை | சென்னையில் அதிர்ச்சி

x

சென்னை வேளச்சேரி பகுதியில் வீட்டிற்கே சென்று கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து தனிப்படை அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், உணவு டெலிவரி செய்யும் தனியார் நிறுவனத்தின் ஊழியரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அப்போது அந்த ஊழியர் வேளச்சேரி நேருநகரை சேர்ந்த ரகுராம் என்பதும், அவர் உணவு டெலிவரி செய்வது போல் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோரின் வீடுகளுக்கே சென்றே கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து ரகுராம் வீட்டில் சோதனையிட்டு அவர் பதுக்கி வைத்திருந்த ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரையும் அவருக்கு கஞ்சா விநியோகம் செய்த தாமோதரன், பாஸ்கரன் ஆகியோரையும் கைது சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்