கருமுத்து கண்ணன் உடலை கண்டு... தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுத அமைச்சர் PTR
மதுரையில் உடல்நல குறைவால் உயிரிழந்த மீனாட்சியம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணனின் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். திமுக எம்.பி.கனிமொழி, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, பெரியகருப்பன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கருமுத்து கண்ணனின் உடலைப் பார்த்த கண்ணீர் சிந்தினார். அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினார்கள்.
Next Story