காதில் சீழ் வந்ததால்.. அறுவை சிகிச்சை..11 ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்த விவகாரம் - உறவினர்கள் முற்றுகை போராட்டம்

x
  • சென்னை திருவொற்றியூரில், அறுவை சிகிச்சை செய்யப்பட்ட 11ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்த நிலையில், மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
  • திருவொற்றியூரைச் சேர்ந்த நந்தினி என்பவரின் மகள் அபிநயாவுக்கு காதில் சீழ் வந்ததால், அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
  • பின்னர் மூச்சுத் திணறல், நெஞ்சுவலி காரணமாக அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அபிநயா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
  • இதனிடையே, மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, உறவினர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் திருவொற்றியூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்