மின்சாரம் பாய்ந்ததில் உடல் கருகி பள்ளி மாணவன் பலி - திருவண்ணாமலையில் அதிர்ச்சி

x

திருவண்ணாமலை அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

போளூர் வசந்தம் நகரை சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவன் அரவிந், தனது வீட்டின் அருகேயுள்ள மற்றொரு வீட்டின் மாடியில் விளையாடியுள்ளார்.

அப்போது மாடியின் மீது சென்ற மின்சார வயர், அரவிந்தின் மீது உரசியுள்ளது.

இதில் மின்சாரம் பாய்ந்ததில், அரவிந்த் உடல் கருகி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்