ஊராட்சி தலைவியும் துணை தலைவியும் பயங்கரமாக சண்டை போட்டுக்கொண்ட காட்சிகள்

x

திருவண்ணாமலை மாவட்டம் பனையூர் ஊராட்சி மன்ற தலைவராக அதிமுகவை சேர்ந்த அஞ்சலி குப்புசாமி என்பவரும், துணை தலைவராக திமுகவை சேர்ந்த வசந்தி என்பவரும் பதவி வகித்து வருகின்றனர். இந்தநிலையில் இவர்கள் இருவரும் கடந்த 13 ஆம் தேதி நடைபெற்ற மாதாந்திர ஊராட்சி மன்ற கூட்டத்தின்போது, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் இருவரும் ஆபாச வார்த்தைகளை கூறி வாக்குவாதம் செய்யும் வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்