சென்னை 'சர்க்கார் எக்ஸ்பிரஸ்' இனி புதுச்சேரி வரை செல்லும்
- சென்னை - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் சர்க்கார் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை, புதுச்சேரி வரை நீட்டிக்கப்படும் என மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ், துணைநிலை ஆளுநர் தமிழிசையிடம் உறுதி அளித்துள்ளார்.
- புதுச்சேரி மாநிலத்திற்கான ரயில் சேவை மற்றும் தகவல்தொடர்பு சேவை குறித்து, மத்திய அமைச்சருடன் துணைநிலை ஆளுநர் தமிழிசை, காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
- அப்போது, தமிழிசையின் கோரிக்கைகளை ஏற்ற மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் இந்த உறுதியை வழங்கினார். இதற்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை நன்றி தெரிவித்தார்.
Next Story