சாரங்கபாணி சுவாமி கோயில் சித்திரை.. பெருவிழாநள்ளிரவில் நடைபெற்ற திருவீதி உலா - சப்பரத்தை இழுத்து பக்தர்கள் சுவாமி தரிசனம்

x

கும்பகோணத்தில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற சாரங்கபாணி சுவாமி திருக்கோயில், 108 வைணவ தலங்களில் 3வது தலமாக போற்றப்படுகிறது. ஏழு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இந்தக் கோயிலில் சித்திரைப் பெருவிழா விமரிசையாக நடைபெற்றது. இரவு சிறப்புப் பூஜைகளுக்குப் பின்னர், சாரங்கபாணி சுவாமியும், சக்கரபாணி சுவாமியும் ஓலைச்சப்பரத்தில் எழுந்தருளினர். இதனையடுத்து நள்ளிரவில் திருவீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, சப்பரத்தை இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்