முதல்வருக்கு மணல் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை

x

கட்டுமாணப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், கல் குவாரிகள் வேலை நிறுத்த‌த்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என மணல் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த திங்கட்கிழமையில் இருந்து தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 500 கல் குவாரிகள், 3 ஆயிரம் கிரஷர்கள் இயங்கவில்லை என கூறியுள்ளனர். இதனால் 55 ஆயிரம் லாரிகள் இயங்காத‌தால், கட்டுமான தொழில்கள் முடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர். சென்னையில் மெட்ரோ CMRL பணிகள், குடிசை மாற்று வாரிய பணிகள் உள்ளிட்டவை கருங்கல், ஜல்லி, எம்.சாண்ட் கிடைக்காமல், வேலைகளை நிறுத்தி வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். லாரி ஓட்டுநர்கள், கட்டுமான தொழிலாளர்கள் என 30 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு, அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்படும் என்பதால், குவாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்த‌த்தை முடிவுக்கு கொண்டு வர முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மணல் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்