குமரியில் இருந்து எடுத்து சென்ற சாமி சிலைகள்..கேரள அரசிடம் ஒப்படைப்பு - பழமை மாறாத நவராத்திரி விழா
திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் பங்கேற்க குமரியிலிருந்து எடுத்து செல்லப்பட்ட சாமி சிலைகள், கேரள அரசிடம் ஒப்படைக்கப்பட்டன. திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்க, குமரியில் இருந்து சாமி சிலைகள், மன்னரின் உடைவாளுடன் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, பூஜையில் வைக்கப்பட்டு, திருப்பி எடுத்து வருவது வழக்கம். அதன்படி, மன்னரின் உடைவாள் தமிழக அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் மன்னரின் உடைவாளுடன், பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து சாமி சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, இருமாநில காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் கேரள அரசிடம் ஒப்படைக்கப்பட்டன.
Next Story