சபரிமலையில் மண்டல பூஜை நிறைவு...மகர விளக்கு பூஜைக்காக காத்திருக்கும் பக்தர்கள்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நிறைவடைந்ததையொட்டி, வழக்கமான பூஜைகளுக்கு பிறகு நடை சாத்தப்பட்டது.
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த நவம்பர் 16-ம் தேதி, மண்டல கால பூஜைகளுக்காக திறக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து மண்டல கால பூஜைகள் நடைபெற்ற நிலையில், நேற்று பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெற்றது. அப்போது ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. பின்னர் ஐயப்பனுக்கு வழக்கமான பூஜைகள் செய்யப்பட்டு, இரவு 10 மணிக்கு கோயில் நடை அடைக்கப்பட்டது. வரும் 30 ஆம் தேதி மாலை மீண்டும் கோயில் நடை திறக்கப்பட்டு, மகர விளக்கு பூஜைக்கான சிறப்பு வழிபாடுகள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story