சபரிமலையில் பக்தர்களின் சிரமத்தை குறைக்க தேவசம்போர்டு எடுத்த நடவடிக்கை!
சபரிமலையில் பக்தர்களின் சிரமத்தை குறைக்க, தரிசன நேரத்தை அதிகரிப்பது குறித்து கேரள உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது. இதனை தொடர்ந்து தேவசம் போர்டு சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், தரிசன நேரத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி அதிகாலை 3 மணி முதல் மதியம் 1.30 மணி வரையும், மாலை 3 மணி முதல் இரவு 11.30 மணி வரையும் தரிசன நேரத்தை நீட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் 18 மணி நேரமாக இருந்த தரிசன நேரம் 19 மணி நேரமாக மாற்றப்பட்டுள்ளது.
Next Story