சபரிமலையில் குவியும் ஐய்யப்ப பக்தர்கள் - ஒரு லட்சத்துக்கும் அதிகமான புக்கிங்
சபரிமலையில் தரிசனம் செய்ய ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த மாதம் 17 தேதி முதல் மண்டல பூஜைகள் நடைபெற்று வருகின்றன. மண்டல பூஜைக்காக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் சபரிமலையில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் டிசம்பர் 9 மற்றும் 12 ஆம் தேதிகளில் தரிசனத்திற்கான முன்பதிவு செய்யப்பட்ட பக்தர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது. டிசம்பர் 9ம் தேதி சபரிமலை தரிசனத்துக்கு இதுவரை இல்லாத அளவில் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 200 பேர் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர். அதிக பக்தர்கள் வரத் தொடங்கியதால் சபரிமலையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சன்னதியின் நான்கு புறங்களிலும் கமாண்டோக்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Next Story