தொழிலதிபர் வீட்டில் ரூ.1.3 கோடி கொள்ளை...பிணை கைதிகளாக குடும்பத்தை வைத்த மர்ம நபர்கள் - தலைநகரை அதிர வைத்த சம்பவம்
டெல்லியில் தொழிலதிபர் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 2 கிலோ தங்கத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். வடமேற்கு டெல்லியில் உள்ள தொழிலதிபர் வீட்டிற்குள் புகுந்த 5 கொள்ளையர்கள் குடும்ப உறுப்பினர்களை துப்பாக்கி முனையில் ஒரு அறையில் பிணை கைதிகளாக வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் வீட்டில் இருந்த ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 2 கிலோ தங்கத்தை கொள்ளையடித்த அவர்கள், போலீசில் புகார் அளித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. வீட்டில் உள்ள சிசிடிவி கேமராக்கள் சேதமடைந்துள்ள நிலையில், வீட்டில் உள்ள ஒருவருக்கு கொள்ளையில் தொடர்பு இருக்குமோ என சந்தேகிப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Next Story